மனநலம் பாதிக்கப்பட்டவர் மரணம் - 6 பேர் கைது

வேலகவுண்டம்பட்டி அருகே மனம் நலம் பாதிக்கப்பட்ட வெளி மாநிலத்தவர் உயிரிழந்த சம்பவத்தில் 6 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் கிராம நிர்வாக அலுவலர் பழனியப்பன் (59) இளநகர் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள தண்ணீர் டேங்க் பகுதியில்(55) வயது மதிக்கத்தக்க காயங்களுடன் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் இறந்து விட்டதாக வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.‌ விசாரனையில் இளநகர் தண்ணீர் டேங்க் அருகே காயங்களுடன் கிடந்த 55 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்டவரை‌ இளநகரை சேர்ந்த டிரைவர் அருண்குமார்(35) என்பவர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்ததும் அங்கு அந்த அடையாளம் தெரியாத நபர் இறந்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார் அருண்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரனையில் கடந்த 31- ஆம் தேதி இரவு இளநகர் தண்ணீர் டேங்க் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு தானே பேசிக்கொண்டு சுற்றி திரிந்த வெளி மாநில நபரை இளநகரை சேர்ந்த 18 வயது நிரம்பிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர், இளநகர், நத்தக்கடவு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி விவேக் (26), இளநகர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மளிகை கடை தொழிலாளி வைத்தீஸ்வரன் (35),அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி திருமலை(31) மற்றும் இளநகர், குடித்தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் குமரேசன் (31) ஆகியோர் தாக்கியது தெரியவந்தது. மேற்கண்ட 6 பேர்களும் மனநலம் பாதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத வெளி மாநிலத்தை சேர்ந்தவரை சரமாரியாக தாக்கியதாகவும் மயக்க அடைந்த அவரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த போது அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து வேலகவுண்டம்பட்டி ய போலீசார் சந்தேகத்தின் பேரில் 6 பேர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story