சரிந்தது மேட்டூர் அணை நீர்வரத்து

சரிந்தது மேட்டூர் அணை நீர்வரத்து

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதியளவு மழை இல்லாததால், மேட்டூர் அணை நீர்வரத்து 2,360 கன அடியாக சரிந்தது.

தமிழககாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 3,000 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 2,823 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2,360 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக , விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 69.02 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 69.22 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 32.03 டி.எம்.சி.யாக உள்ளது.

Tags

Next Story