மேட்டூர் அணை நீர மட்டம் 50 அடியாக உயர்வு.
மேட்டூர் அணை
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசத்திற்காக கடந்த ஜூன் 12 தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின்ரின் அளவு குறைய தொடங்கியது. தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. ஜீன் 12-ல் 103 அடியாக இருந்த நீர் மட்டம் இம்மாதம் 10-ம் தேதி 30 அடியாக சரிந்தது. இதனால் குடிநீர் மற்றும் மீன்வளத்தை கருத்தில் கொண்டு பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் வட கிழக்கு பருவ மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று வினாடிக்கு 4,496 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,855 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீருக்குநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து 50.50 அடியாகவும், நீர் இருப்பு 18.12 டி.எம்.சி,யாகவும் உள்ளது.
Tags
Next Story