இடைநிலை ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

இடைநிலை ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், அதுவரை போராட்டத்தில் ஈடுபடாமல் பணிக்கு திரும்புமாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒருவார காலமாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. . இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது.மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது.

அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும், கல்வியாண்டில் இறுதிநிலையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதை கவனத்தில் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பணிக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story