எ.வ.வேலு மனைவி கல்லூரி முறைகேடு - உயர் நீதிமன்றம் தலையிட மறுப்பு

எ.வ.வேலு மனைவி கல்லூரி முறைகேடு - உயர் நீதிமன்றம் தலையிட மறுப்பு

அமைச்சர் எ.வ.வேலு

பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி பெறப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது.
சட்ட விரோதமான முறையில் போலி ஆவணங்கள் மூலம் அமைச்சர் எ.வ. வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டதாக கூறி அனுமதியை ரத்து செய்யக்கோரி திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ். சங்கர் மனு அளித்தார். கல்லூரி கட்ட 20 ஏக்கர் நிலம் வேண்டுமென்ற நிலையில், 7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே கல்லூரி தொடங்கப்பட்டது மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிலம் எதையும் ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்படவில்லை. மனுதாரர் தரப்பில் பழைய சர்வே எண் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று கல்லூரி தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் ( AICTE) தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story