ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார்: அமைச்சர்
அமைச்சர் கீதா ஜீவன்
ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதி அளித்தார்.
திருநெல்வேலி திருமண்டல நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்கள் ஊதியம் குறித்த கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவிக்க வேண்டியதன் நிமித்தம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனனை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது, ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் தெரிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
Next Story