அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு ரத்து

முறைகேடு புகாரில்அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு நீதிமன்றம் விடுவித்த தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக ஒப்புதல் பெற்று வழக்கு நடத்த உத்தரவிட்டுள்ளது.

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த புகாரில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொடர்ந்து முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி அந்த வாரியத்திற்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கிலிருந்து அமைச்சர் ஐ பெரியசாமியை 2023 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து இந்த வழக்கை நடத்தினார்.

Tags

Next Story