கடற்கரையில் நடைபாதை அமைக்கும் பணியை துவக்கி வைத்த அமைச்சர்

கடற்கரையில் நடைபாதை அமைக்கும் பணியை துவக்கி வைத்த அமைச்சர்

நடைபாதை அமைக்கும் பணி துவக்கி வைப்பு 

ரூ.5.41 கோடி மதிப்பீட்டில் புதிய நடைபாதை அமைத்தல் மற்றும் கடற்கரையை மேம்படுத்துவதற்கான பணிகளை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் காசிமேடு கடற்கரையை ரூ.5.41 கோடி மதிப்பீட்டில் புதிய நடைபாதை அமைத்தல் மற்றும் கடற்கரையை மேம்படுத்துவதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா ராஜன், ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி நகரமைப்பு குழுத் தலைவர் இளைய அருணா, மண்டலக் குழுத் தலைவர் நேதாஜி.யூ.கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் தேவி, குமாரி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story