புதிய மருத்துவமனை கட்டிடம் கட்ட பூமிபூஜை - அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

புதிய மருத்துவமனை கட்டிடம் கட்ட  பூமிபூஜை - அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

புதிய மருத்துவமனை கட்டிடம் கட்ட பூமிபூஜை 

சோளிங்கர் அரசு மருத்துவமனையில் ரூ.5.75 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜையை அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்..
சோளிங்கர் அரசு மருத்துவமனையில் ரூ.5.75 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவற்றை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் 15-வது நிதிக்குழு சுகாதார மானிய திட்டத்தின் கீழ் ரூ.5.75 கோடி மதிப்பில் கூடுதல் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை மற்றும் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கண் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்று புதிய கட்டிட கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜையும், கண் அறுவை சிகிச்சை அரங்கத்தையும் தொடங்கி வைத்தனர். மேலும், தக்கோலம் பேரூராட்சியில் உள்ள அழகுராஜா பெருமாள் கோயில் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 53 குடும்பங்களுக்கு பூமி தானம் வாரியம் மூலம் வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். இதில், சோளிங்கர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நகராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி அசோகன் (சோளிங்கர்), லட்சுமி பாரி (அரக்கோணம்) உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story