கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஏரல் நர்சுக்கு அமைச்சர் பாராட்டு

கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஏரல் நர்சுக்கு அமைச்சர் பாராட்டு

பாராட்டு சான்றிதழ் வழங்கல் 

வெள்ளநீர் நிரம்பி இருந்தபோதும், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஏரல் நர்சுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரொக்கப்பரிசு வழங்கி கவரவித்தார்.

சென்னை, எழும்பூர், நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் ரூ.12.65 கோடி செலவில் கட்டப்பட்ட பயிற்சி பள்ளி, விடுதி கட்டிடம், அதிநவீன ஒலி-ஒளி சாதனங்களுடன் கூடிய கலந்தாய்வு கூடம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

‘மிக்ஜம்’ புயல் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பொழிந்தபோது சிறப்பாக களப்பணியாற்றிய 7 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2,271 கிராம சுகாதார நர்சுகளுக்கான பணி நியமனங்கள் மருத்துவ தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று கொண்டிருக்கிறது, விரைவில் பணி நியமனங்கள் செய்யப்படும். டிசம்பரில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பொழிவு இருந்தது. அதனால் 10,454 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் மட்டும், 24,819 முகாம்கள் நடத்தப்பட்டு, 13 லட்சத்து 33 ஆயிரத்து 211 பேர் பயன் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியிருந்தபோது, கர்ப்பிணி தாய்மாருக்கு பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுக்க உதவியாக இருந்த நர்சு ஜெயலட்சுமிக்கு, மருத்துவ உதவியாளர் பிரட்டம்மாள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டு, தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

1,021 டாக்டர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டு, 20 சுகாதார மாவட்டங்களுக்கு பணியில் அமர்த்தும் பணி நடத்தப்பட்டது. இதில் 30 டாக்டர்கள் கர்ப்பிணி தாய்மார்களாகவும், பிரசவித்த தாய்மார்களாகவும் உள்ளனர். பணியில் சேருவதற்கு 15 நாட்கள் காலஅவகாசம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story