அமைச்சர் ராமச்சந்திரன் சொத்துகுவிப்பு வழக்கு: நாளை ஒத்திவைப்பு

அமைச்சர் ராமச்சந்திரன் சொத்துகுவிப்பு வழக்கு:  நாளை ஒத்திவைப்பு
அமைச்சர் ராமச்சந்திரன் 
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக தொடர்ந்த வழக்கில் அவர் தரப்பு வாதங்களை தொடர நாளை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு வழக்கின் இறுதி விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

2006 ஏப்ரல் 1 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் ரூ. 44,59,067 மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை மேல் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அனுமதித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை ராமச்சந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாடகை வருவாய், திரையரங்கு இடிக்கப்பட்டு வீட்டுமனைகளாக்கி விற்கப்பட்டதன் மூலம் வந்த வருவாய், ஸ்பின்னிங் மில் மூலம் கிடைத்த வருவாய் தொடர்பான ஆவணங்கள் இருந்தும், லஞ்ச ஒழிப்புத்துறை முதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை. இரண்டாவது அறிக்கையில் இந்த வருமானங்கள் சேர்க்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் தரப்பில் வாதங்களை தொடர்வதற்காக நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story