திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்


திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 17-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சிறப்பாக நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதன் ஒருபகுதியாக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாடு குறித்த மோட்டார் சைக்கிள் பிரசார ஊர்வலத்தை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் சுற்றிவந்த நிலையில் சமீபத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து சேர்ந்தது. இந்த ஊர்வலத்தில் வந்தவர்களை அமைச்சர் கே.என்.நேரு வரவேற்று பாராட்டியதுடன்,

அவருடன் மாநாட்டு பந்தல் திடலில் மோட்டார் சைக்கிள் ஓட்டி கட்சியினரை உற்சாகப்படுத்தினார். மேலும் இந்த மாநாட்டு பணி பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 12 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நாள்தோறும் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

Tags

Next Story