தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்
அமைச்சர் சேகர் பாபு
திருவேங்கடம் சாலை நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
சென்னையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இன்று (03.03.2024) திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு- 73 உட்பட்ட திருவேங்கடம் சாலை, நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, திரு.வி. க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story