அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும்-சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும்-சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

செந்தில் பாலாஜி 

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையின் பலகட்ட விசாரணைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ல் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் இன்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது சட்டவிரோதம் இல்லை. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவுக்கு தடையில்லை என்றும், கைது செய்த பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 வரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளனர்.

Tags

Next Story