நவீன பொதுக்கழிப்பிடத்தை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு
நவீன கழிப்பிடத்தை திறந்து வைத்த அமைச்சர்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 37 லட்சம் மதிப்பீட்டில் நவீன பொதுக் கழிப்பிடம்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இராயபுரம் மண்டலம், வார்டு-59, சென்ட்ரல் இரயில் நிலையம் பகுதியில் தூய்மை இந்தியா திட்ட நிதியின் கீழ் ரூ.37 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன பொதுக் கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர்.பிரியா, மண்டலக் குழுத் தலைவர் திரு.பி. ஸ்ரீராமுலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story