வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு.
தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி இன்று (19.6.2024) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு வட சென்னை வளர்ச்சித் திட்டப் பணிகளை துரிதபடுத்தும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5, வால்டாக்ஸ் ரோடு, அண்ணா பிள்ளை தெருவில் புதியதாக அமையவுள்ள சமுதாய நலக்கூடம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களை கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ராஜன் கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, கூடுதல் ஆணையர் (வருவாய் (ம) நிதி) ஆர். லலிதா, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா , சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி, மண்டலக் குழுத்தலைவர் ஸ்ரீராமுலு, மண்டல அலுவலர் தமிழ்ச்செல்வன், மாமன்ற உறுப்பினர் ராஜேஸ் ஜெயின் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story