கைகாட்டியில் தண்ணீர் பந்தலை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்

கைகாட்டியில் தண்ணீர் பந்தலை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்

அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் கோடை வெயிலுக்கான நீர்மோர் தண்ணீர் பந்தலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.


அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் கோடை வெயிலுக்கான நீர்மோர் தண்ணீர் பந்தலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

அரியலூர்,மே.15- அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் கோடை வெயிலுக்கான நீர்மோர் தண்ணீர் பந்தலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். அரியலூர் மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் விதமாக அரியலூர் மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்கப்படுகிறது.

இந்த நிலையில் வீ கைகாட்டி நான்கு வழிச்சாலையில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் போக்குவரத்து துறை அமைச்சர் பொதுமக்களுக்கு நீர்மோர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினார். திறக்கப்படும் நீர் மோர் பந்தல் நாள் முழுவதும் அன்றாடம் செயல்படும் பொருட்டு பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இது குறித்து கூறிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொது மக்களின் தாகத்தை தனித்து வருவதாகவும், வெயிலின் உஷ்ணத்தை தணிக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கூறினார்.

Tags

Next Story