அடிமைகளின் ஓனர்களை விரட்டுவோம் - அமைச்சர் உதயநிதி

அடிமைகளின் ஓனர்களை விரட்டுவோம் - அமைச்சர் உதயநிதி
 விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் 
ஜெயங்கொண்டத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவனை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு கோரி தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,


விசிக மாநாட்டிற்கு பலமுறை அழைத்தும் வரமுடியாத சூழ்நிலை இருந்தது. இன்று இந்த கூட்டமே மாநாடு போல உள்ளது. பானை சின்னம் உலகப்புகழ்ப்பெற்ற சின்னமாகியுள்ளது. இந்த சின்னம் எல்லோருக்கும் தெரிஞ்ச சின்னமாகியுள்ளது. தமிழ்நாடு தாண்டி இந்திய அளவில் எல்லா செய்திகளிலும் பானை சின்னம் வந்துள்ளது. 2018 ஆண்டு முதல் பல்வேறு தலைவர்களுக்கு நான் பிரச்சாரம் செய்துள்ளேன். இன்று என் வாழ்வில் ஒரு பொன்னாள். இன்று தான் முதன்முதலாக திருமாவளவனுக்காக நான் பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன். திருமாவளவனை 3 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து இந்தொகுதிக்கு திமுக தேர்தல் வாக்குறுதிகள் கூறினார். கொரோனா காலத்தில் பிரதமர் மக்களுக்கு உதவாமல் வீட்டிற்கு வெளியே விளக்குபிடியுங்கள், தட்டை தட்டுங்கள் என்று கூறினார்.ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் கொரோன தடுப்பூசி குறித்து பயத்தை போக்கி கோவிட் வார்ட்டுக்கு சென்ற ஒரே முதலமைச்சர்.ஆட்சி அமைத்தவுடன் கடும் நிதி நெருக்கடியிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை செயல்படுத்தினார்‌. பிங்க் பேருந்தை அனைவரும் ஸ்டாலின் பஸ் என்று தான் கூறினார்கள். பெண்களின் வாழ்வை மேம்படுத்த தேர்தல் அறிக்கையில் சொல்லாத புதுமைப்பெண்கள் போன்ற திட்டங்களையும் செயல்படுத்தியவர். தற்போது தமிழ் புதல்வன் என்று ஆண்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. திராவிட மாடலின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றனர்.மகளீர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். இந்தியாவின் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது போல கேஸ், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப்படும். அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றப்படும். மோடி 800 ரூபாயை உயர்த்திவிட்டு 100 ரூபாயை குறைத்துள்ளார். 10 வருடம் பிரதமராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கு வராதவர் கடந்த 10 நாளாக தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார். ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவார் என்று என்னிடம் கூறினார்கள்.

நான் சொன்னேன் என்னோட முதல் பிரச்சாரமே அங்கிருந்து தான் தொடங்கும் என்றேன். ஆனால் பிரதமர் போட்டியிடாமல் பயந்து போய்விட்டார்.தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட் கூட வாங்காது. மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்றார். புதிய இந்தியா பிறக்கும் என்றான். யாராவது புதிய இந்தியாவை பார்த்தீர்களா? தமிழ்நாட்டின் இயற்க்கை பேரிடரில் ஒன்றிய அரசு ஒரு பைசாக்கூட கொடுக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் தலா 6000 ரூபாய் வழங்கினார். கருப்புப் பணத்தை மீட்டு அனைவருக்கும் 15இலட்சம் வழங்கப்படும் என்றார் ஆனால் 15 பைசாக்கூட கொடுக்கவில்லை. நீட் தேர்வால் 22 மாணவர்கள் தமிழ்நாட்டில் பலியாகினர். இதற்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்.

கூட இருந்த அதிமுக பதில் சொல்ல வேண்டும். அதற்கான நேரம் தான் ஏப்ரல் 19ம் தேதி. இந்த முறை 40க்கும் 40 தொகுதிகளை வென்று கலைஞரின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுப்போம்- 2021 ல் அடிமைகளை விரட்டினோன். இந்த ஆண்டில் அடிமைகளின் ஓனர்களை தேசிய அளவில் விரட்டுவோம். அடுத்த பிரதமரை தேர்தடுக்கும் இடத்தில் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டும் என இவ்வாறு பேசினார்.

இதில் காட்டுமன்னார்குடி எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க கண்ணன், திமுக சட்ட திட்ட திருத்த குழு சுபா.சந்திரசேகர், திமுக நகர செயலாளர் கருணாநிதி, இளைஞர் அணி அமைப்பாளர் தெய்வஇளையராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் கதிர்வளவன், தேர்தல் மேலிட பொறுப்பாளர்கள் விடுதலைச்செழியன் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இலக்கியதாசன், மாவட்ட அமைப்பாளர்கள் இளையபாரதி, சுமதிசிவகுமார், சின்னராசா உள்ளிட்ட நிர்வாகிகள்,மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ,மதிமுக, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story