தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர்

ஆவினில் தீபாவளி விற்பனையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

உதகையில் உள்ள மாவட்ட ஆவின் தலைமையகத்தில் இந்த ஆண்டு தீபாவளிகாக தயாரிக்கபட்டுள்ள ஆவின் இனிப்பு வகைகளின் சிறப்பு விற்பனையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய மனோ தங்கராஜ்: தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் செலவுகளை குறைத்து லாபத்தில் இயக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அதன்படி கடந்த மாதம் மின் சிக்கனம் காரணமாக 42 லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டு இருப்பதாக பேசினார்.

மேலும் தமிழகத்தில் ஆவின் பொருட்களின் உற்பத்தி நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதாகவும் பால் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர் இந்தியாவில் விவசாய துறையில் GDP தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது கவலை அளிப்பதாக பேசினார். தற்போது ஆவின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கூறிய மனோதங்கராஜ் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டை விட 20% ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இது மேலும் அதிகரிக்கும் என்று கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story