வெப்ப நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்

வெப்ப நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்

 வெப்பம் சார்ந்த நோய்கள் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. 

வெப்பம் சார்ந்த நோய்கள் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு ஆந்திரா ஒடிசா மேற்குவங்கம் பீகார் உத்தர பிரதேஷ் போன்ற மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக வீசி வருகிறது.

இதன் காரணமாக மக்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வெப்பம் சார்ந்த நோய்களை தடுப்பது எளிது என்றும், வெப்பம் சார்ந்த நோய்கள் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் சில வழிமுறைகளை அறிவித்துள்ளது.

உடல் நலக்குறைவு அல்லது தசைப்பிடிப்புகள் ஏதேனும் இருந்தால், 1) உடனடியாக வெப்பமான இடத்திலிருந்து குளிர்ச்சியான இடத்திற்கு செல்ல வேண்டும். 2) உடல் வெப்பநிலையை சரி பார்க்க வேண்டும் 3) உடனடியாக மருத்துவ உதவி நாட வேண்டும் 4) கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் நீர் இழப்பு அதிகமாக ஏற்படும் எனவே எலக்ட்ரோலைட்டிகளை பயன்படுத்தி நீரேற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story