அரசு பஸ்சில் தவறவிட்ட பணம் ஒப்படைப்பு - டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு

அரசு பஸ்சில் தவறவிட்ட பணம் ஒப்படைப்பு - டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு

அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.3½ லட்சத்தை பயணியிடம் ஒப்படைத்த டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு

அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.3½ லட்சத்தை பயணியிடம் ஒப்படைத்த டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு
சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக தர்மபுரி மண்டலத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பணிமனையில் இருந்து கடந்த 11-ந் தேதி அரசு பஸ் ஒன்று ஓசூருக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் கே.தவமணி ஓட்டி சென்றார். அவருடன் கண்டக்டராக மற்றொரு சி.தவமணி பணியில் இருந்தார். காலை 8 மணிக்கு சூளகிரி பஸ் நிலையத்திற்கு பஸ் சென்றபோது, அங்கு புருசோத்தமன் என்பவர் ஓசூர் செல்வதற்காக பையுடன் ஏறினார். பின்னர் அவர் லக்கேஜ் கேலரியில் பையை வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனால் ஓசூர் வந்தவுடன் அவர் பையை எடுக்காமல் கீழே இறங்கி சென்றுவிட்டார். இதையடுத்து அந்த பஸ் ஓசூர் சென்று விட்டு மீண்டும் கிருஷ்ணகிரி வழியாக வேலூருக்கு புறப்பட்டு சென்றது. இதனிடையே, பையை தவறவிட்ட புருசோத்தமன், ஓசூர் பஸ் நிலையத்தின் நேர காப்பாளர் அறைக்கு சென்று முறையிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பஸ்சின் கண்டக்டர் தவமணியை நேர காப்பாளர் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார். தொடர்ந்து அந்த பையை கண்டக்டர் மீட்டு பத்திரமாக வைத்து மீண்டும் ஓசூருக்கு வந்தவுடன் நேரம் காப்பாளரிடம் ஒப்படைத்தார். அந்த பையில் ரூ.3½ லட்சம் பணம் மற்றும் அடையாள ஆவணங்கள் இருந்தன. பின்னர் புருசோத்தமனிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது. அரசு பஸ்சில் பயணி தவறவிட்ட பையை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த டிரைவர் மற்றும் கண்டக்டரை சேலம் அரசு போக்குவரத்துக்கழக கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி நேரில் அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story