சேலத்தில் வளர்ச்சி பணிகள் தொடங்கி வைத்த எம்எல்ஏ
பணிகளை தொடக்கி வைத்த எம்எல்ஏ
சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி அழகுசமுத்திரம் பகுதிக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சத்தில் சாக்கடை கால்வாய் பணிக்கும், கருக்கல்வாடி கிருஷ்ணம்புதூர் பகுதிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ அய்யப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் குப்புசாமி, கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், செல்வகுமார், ஒன்றிய துணைச்செயலாளர் ராஜேந்திரன், அழகுசமுத்திரம், ஊராட்சி தலைவி அறிவழகிமணி, கவுன்சிலர் ராஜா, ஊராட்சி துணைத்தலைவர் கோபால், வார்டு உறுப்பினர்கள் குமார், ரமேஷ், தமிழ்ச்செல்வன், செல்வராஜ், கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.