தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை.

மழை (பைல் படம்)

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான மழை ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story