வாராணசி தொகுதியில் வெற்றி பெறுவார் மோடி - அண்ணாமலை கருத்து !!

வாராணசி தொகுதியில் வெற்றி பெறுவார் மோடி - அண்ணாமலை கருத்து !!

அண்ணாமலை 

உத்தரப்பிரதேசம் மாநகராட்சி வாராணசி தொகுதியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியது - இதற்கு முன்பும் நம் பிரதமரின் தொகுதிகளை பார்த்திருக்கிறோம். மாநகராட்சி, நகரம் முற்றிலும் நகரம் வாராணசி முற்றிலும் மாறிவிட்டது என பகுதி மக்கள் பெருமிதமாக கூற முடியும் அளவிற்கு பிரதமர் மோடி தனது தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளை உண்மையாக செய்திருக்கிறார்.

பிரதமரால் தனது தொகுதிக்கு என்ன செய்ய முடியும் என்பதை அவர் காட்டியுள்ளார். இந்த முறை வாராணசி தொகுதியில் அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவர் செய்தது போல் மற்ற எம்பி-களும் தங்கள் தொகுதியில் செய்ய வேண்டும் என அவர் உறுதிப்பட தெரிவிக்கிறார்.

பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ளது இது பிரதமர் மோடியின் தேர்தல் என்பதால் மக்கள் தெளிவாக உள்ளனர், ஓட்டு அனைவருக்கும் தான் மும்பை போன்ற பெருமை ஆன நிதி தலைநகரம் கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலிலும் பிரதமருக்கு உறுதுணையாக நின்றுள்ளது.

ஆனால் 2024 ஆம் ஆண்டு தேர்தல் மாறாக இருக்கும் என நான் நினைக்கவில்லை மும்பையில் பாஜக மற்றும் தே.ஜா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறுவதை மீண்டும் ஒருமுறை பார்க்கப் போகிறேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story