மோடியின் சுற்றுப்பயணம் வெற்றியின் அடிப்படை இருக்கும் -ஜி. கே. வாசன்

தமிழகத்தில் மோடியின் சுற்றுப்பயணம் வெற்றியின் அடிப்படையில் இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் கூறினார்.

சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் கிஷன் ரெட்டியை சந்தித்த பின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்கள் சந்தித்தார். அவர் கூறுகையில் எந்த வியூகத்தின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி அடைய வேண்டும்.. நம்முடைய தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பிலே பாராளுமன்றத்திலே சேர்ந்த பிரதிநிதிகள் தங்களுடைய குரலை தமிழகத்திற்காகவும் தங்களுடைய தொகுதிக்காகவும் ஒழிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடந்தது.. பரஸ்பரம் நட்போடும் மரியாதைக்கும் இருப்பவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பதை யாருக்கும் மாற்று கருத்து கிடையாது.

படிப்படியா பாரதிய ஜனதா கட்சி தலைமையிலே என்டிஏ தலைமையிலான தமிழகத்தினுடைய கூட்டணி உயர்ந்து கொண்டிருக்கிறது சிறந்து கொண்டிருக்கிறது வளர்ந்து கொண்டிருக்கிறது... இதனுடைய முழு வடிவம் வெற்றி வடிவமாக அமையக்கூடும்... தேர்தல் வேலையெல்லாம் தாண்டி சுமுகமான முறையிலே அனைத்து கட்சிகளும் மொத்த கருத்து உடையவர்களாக தேர்தல்களை வெல்லக்கூடிய ஆலோசனையை முதன்மையாக நான் வைத்தேன்... நீங்கள் கேட்ட தொகுதியை தருவார்களா என்ற கேள்விக்கு நம்பிக்கையோடு இருக்கிறோம் நல்லது நடக்கும் என்று தானே எல்லோரும் நினைக்க வேண்டும். தமிழகத்தில் பிரதமருடைய சுற்றுப்பயணம் வெற்றியின் அடிப்படையிலும் சதவீதத்தின் அடிப்படையிலும் இருக்கும்... ஆளுங்கட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு அதை உணரும்... என பேசினார் .

Tags

Next Story