வாக்கு எண்ணும் மையத்தில் 250 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் 250 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

வாக்கு இயந்திர அறையை ஆய்வு செய்த அதிகாரிகள்

அரக்கோணம் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதற்காக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு. காட்பாடி, திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில்,

பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்குள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடத்தில் தரைத்தளத்தில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களும், முதல் தளத்தில் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, இரண்டாம் தளத்தில் திருத்தணி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. க

ல்லூரியின் வலது புறத்தில் உள்ள 30 வகுப்பறை கொண்ட கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, முதல் தளத்தில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி, இரண்டாம் தளத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணும் மையம் முழுவதும் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story