ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக மனு கொடுக்கும் இயக்கம்
கார்ப்பரேட்களுக்கு ஆதரவான, விவசாயிகள் பொதுமக்களை பாதிக்கக்கூடிய ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. அவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வே. ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் கலந்து கொண்டு பேசினார். திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.வி. குமாரசாமி, சி.ஆர்.சிதம்பரம், பி.கோவிந்தராசு, எஸ்.ஜகுபர் அலி, எஸ்.பாஸ்கர், பி.உலகநாதன், எஸ்.ஜாக்குலின் மேரி மூத்த தோழர் பூவாணம் மாணிக்கம் மற்றும் நகரக் குழு ரவி, கிளைச் செயலாளர்கள், வேத. கரம்சந்த் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் - வெளிமடம் மின்வாரிய அலுவலகத்தில் சரளா செந்தில், பெருமகளூர் மின்வாரிய அலுவலகத்தில் வீ.கருப்பையா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பெரியண்ணன், நாகேந்திரன், சேகர், வி.ஆர்.கே.செந்தில்குமார் மற்றும் சகாபுதீன், அகிலன், தர்மசீலன், வைத்திலிங்கம், சிவனேசன், மறவன் வயல் பழனிவேலு, கழுமங்குடா, சுப்பம்மாள் சத்திரம், மணக்காடு, நெல்லையடிக்காடு, கழனிவாசல், சீகன்காடு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.