கல்லூரி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல்லூரி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மற்றும் எடுநெட் பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்து ஆனது.


தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மற்றும் எடுநெட் பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்து ஆனது.

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சிக்கு ஸ்காட் கல்விக் குழுமத்தின் நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு, பொது மேலாளர் (வளர்ச்சி), ஜெயக்குமார், ஸ்காட் கல்விக் குழும திறன்மேம்பாட்டு பயிற்சித் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளின் இயக்குநர் ரவிசங்கர், கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞான சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன், நிர்வாக அதிகாரி விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக எடூநெட் பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டு வேலைவாயப்புத்துறை வல்லுநர் விக்னேஷ் கலந்து கொண்டார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சாராம்சங்களை பன்னாட்டு, வல்லுநர் விக்னேஷ் ஸ்காட் கல்விக் குழும நிர்வாகிகளுக்கு விளக்கினார். அதன்படி, வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு TCS, Zoho உள்ளிட்ட பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களின் வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் இலவச தொழில் பயிற்சி எடுநெட் பன்னாட்டு வல்லுநர்களால் வழங்கப்படும். ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ஸ், மெஷின் லேனிங், பிளாக் செயின் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்று பயன்பெற உள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் இந்தியா முழுவதும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் மதர் தெரசா பொறியியல் கல்லூரிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சியை அளிக்க உள்ளனர். எட்டுவகையான அதிநவீன மென்பொருள் பாடத்திட்டங்களை மாணவர்கள் இலவசமாக பெறுவர். பன்னாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஸ்காட் கல்விக் குழும திறன் மேம்பாட்டுத்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளின் இயக்குநர் ரவிசங்கர், கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞான சந்திரன், எடுநெட் பன்னாட்டு நிறுவன இயக்குநர் ஆசிஷ் அரோரா மற்றும் வல்லுநர் விக்னேஷ். ஆகியோர் கையெழுத்து இட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்த்திற்கான ஏற்பாடுகளை மதர் தெரசா பொறியியல் கல்லூரியின் வேலைவாய்ப்புத்துறை அதிகாரி பேராசிரியர் ரீகன், திறன் மேம்பாட்டுத்துறை அதிகாரி பேராசிரியர் பாலின் விசு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story