திருவொற்றியூரில் புதிய பணிகளுக்கு எம்பி அடிக்கல்
எம்பி
திருவொற்றியூரில் 2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி பங்கேற்றார்.
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மணலி சிபிசிஎல் நிறுவனத்தின் சி எஸ் ஆர் மற்றும் ஜி சி சி நிதியிலிருந்தும் ருபாய் 1,95,45,000 மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பணியையும்,
திருவொற்றியூர் விம்கோ நகர் ராமநாதபுரத்தில், ரூபாய் 1கோடியே 50 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் அமைக்கும் பணியையும், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மண்டல குழு தலைவர் தனியரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags
Next Story