எம்பி., வீட்டில் ரூ.300 கோடி; இதற்கு காங்., பதில் சொல்லணும் !
எம்பி., வீட்டில் ரூ.300 கோடி; இதற்கு காங்., பதில் சொல்ல வேண்டும் என பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி வீட்டில் ரூ.300 கோடி.ஊழல்பற்றி பேசும் காங்கிரஸ் தான் பதில் சொல்ல வேண்டும் . கார்த்தியாயினி பேட்டி : வேலூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பாஜக மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிசம்பர் 6 ஆம் தேதி காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி சாகுவின் வீட்டில் அனைத்து வணிக தளங்களிலும் சோதனை நடந்தது. இதில் 300-கோடிக்கும் மேலாக பணம் கைப்பற்றப்பட்டது. இதுவரையில் இந்தியாவிலேயே சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட பணம் இது தான் அதிக அளவு பணமாகும் .
கடைசியாக ரூ.351 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது ஒடிசாவில் காங்கிரஸ் ராஜ்ய சபா எம்.பி, ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் , அவர் ராகுல் காந்தி யாத்திரைக்கு தேவையானதை செய்தவர் . பண மதிப்பிழப்பின் மூலம் ஊழல்வாதிகளின் பணம் வெளிகொண்டுவரப்பட்டது . ஆனால் தற்போது இந்த காங்கிரஸ் எம்பியின் அதிக பணம் குறித்து காங்கிரஸ் அமைதிகாக்கிறது. இதற்கு நிச்சயமாக காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும். இந்திய பிரதமர் எல்லா நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும் இந்தியாவை காப்பாற்றினார். ஆனால் இவ்வளவு பணம் குறித்து கணக்கில் வராதது குறித்து காங்கிரஸ் தான் சொல்ல வேண்டும் . இந்தியா கூட்டணியின் ஒரே உள் நோக்கம் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் மக்கள் மோடியை விரும்புகின்றனர். அவரின் வார்த்தையை நம்புகின்றனர் . எந்த இடைதரகரும் இல்லாமல் உண்மையான பயனாளிகள் பயனடையும் வகையில் நலதிட்டங்களை வங்கி கணக்கில் நேரடி பரிவர்த்தனையை செய்து மக்களுக்கு நலதிட்டங்களை பிரதமர் மோடி அளித்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் திமுக இந்தியா தேசத்தின் கூட்டுகொள்ளை அடிக்கவே கூட்டணியாக உள்ளது. பிரதமர் எல்லா நாடுகளிலும் ஏற்கும் வகையில் சிறுதானிய வகைகள் அறிமுகம் செய்து நல்ல விஷயங்களை செய்கிறார் .
புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டை கூட இல்லாமல் 6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது என்பது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக அறிவித்ததை போல் ஏமாற்று வேலை தான். மக்கள் பலர் இறந்தனர் இதற்கு 6 ஆயிரம் கொடுத்தால் சரியாகிவிடுமா மக்கள் பணியை நாங்கள் செய்வோம் என சொன்னவர்கள் ஏன் புயல் பாதிப்பின் போது நேரில் வரவில்லை என மக்கள் கேட்கின்றனர் என கார்த்தியாயினி கூறினார்.