மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

ரூ.1.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


ரூ.1.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இன்று (08.06.2024) தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட லஸ் சர்ச் சாலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர்முனைவர் கார்த்திகேயன், இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய செயல் இயக்குநர் செ.சரவணன், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், தலைமைப் பொறியாளர் எஸ். ராஜேந்திரன் (பொது) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்

Tags

Next Story