முரசொலி பஞ்சமி நில வழக்கு ஏப்.25 க்கு ஒத்திவைப்பு

முரசொலி பஞ்சமி நில வழக்கு ஏப்.25 க்கு ஒத்திவைப்பு

சென்னை உயர் நீதிமன்றம் 

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்ததாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க கூடாது என தேசிய பட்டியிலினதோர் ஆணையத்தை அறிவுறுத்துவதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாஜக-வை சேர்ந்த சீனிவாசன் அளித்த புகாரில் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை நடத்தும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story