முருகன் மலைக்கோவில் பாதை: 7 நாட்களுக்குள் சீரமைக்க உத்தரவு

முருகன் மலைக்கோவில் பாதை:  7 நாட்களுக்குள் சீரமைக்க உத்தரவு

ஆணையர் ஆய்வு

முருகன் மலைக்கோவில் பாதை, 7 நாட்களுக்குள் சீரமைக்க ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைப்பாதை மண் சரிவு மற்றும் தடுப்பு சுவர் சேதம் அடைந்ததை தொடர்ந்து, கடந்த,11ம் தேதி முதல் அனைத்து வாகனங்கள் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதரன், தலைமை பொறியாளர் பெரியசாமி, செயற்பொறியாளர் செல்வராஜ், அறங்காவலர்கள் மோகனன், சுரேஷ்பாபு, நாகன், இணை ஆணையர் ரமணி, மண்டல இணை ஆணையர் விஜயா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்பு இந்து சமய ஆணையர் முரளிதரன் மண்சரிவு மற்றும் சீரமைக்கும் பணிகள் குறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, இப்பணிகள் ஒரு வாரத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதுவரை மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கோவில் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் ஆணையர் உத்தரவிட்டார். ஆய்வின்போது திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story