மைசூர் - தூத்துக்குடி ரயிலில் சாதாரண பெட்டிகள் இணைப்பு

மைசூர் - தூத்துக்குடி ரயிலில் சாதாரண பெட்டிகள் இணைப்பு

 ரயில்

மைசூர் - தூத்துக்குடி ரயில்களில் பயணிகளுக்காக பொதுப் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. 
மைசூர் - தூத்துக்குடி ரயிலில் ஒரு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி குறைத்துவிட்டு சாதாரண பயணிகளுக்காக பொதுப் பெட்டிகள் ஜூலை 23 முதல் இணைக்கப்படுகிறது. மேலும், ஜூலை 24 முதல் தூத்துக்குடி - மைசூர் ரயிலிலும் மாற்றம் செய்யப்பட்டு பொதுப் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் சாதாரண பொது மக்கள் மிகுந்த பயனடைவார். இதற்காக பரிந்துரை செய்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் நடவடிக்கை எடுத்த தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர், மா. பிரமநாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story