குமரி : பாரதிய ஜனதாவில் இணைந்த  நாம் தமிழர் கட்சி நிர்வாகி

குமரி : பாரதிய ஜனதாவில் இணைந்த  நாம் தமிழர் கட்சி நிர்வாகி
பாரதிய ஜனதாவில் இணைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி.
கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் தொழிற்சங்க செயலாளராக பதவி வகித்தவர் மேரி ஆட்லின் . இவர் 2021-ம் ஆண்டின் நாம் தமிழர் கட்சியின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த நிலையில், மேரி ஆட்லின் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நிகழ்ச்சியில் பா ஜ க மாநில செயலாளர் மீனாதேவ் , பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் ஆர். டி சுரேஷ் , விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் பெருங்கோட்ட பொறுப்பாளர் ஆறுமுகம் பிள்ளை, வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட துணை தலைவர் ஜாஸ்மின் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story