அங்கீகாரம் பெற்று உருவெடுக்கும் நாம் தமிழர் கட்சி!
நாம் தமிழர் கட்சி
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்று அதிமுக பாமக-வை பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர் கட்சி.
நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி.
ஆண் பெண் என வேறுபாடு பார்க்காமல் 20 ஆம் வேட்பாளர்கள் 20 பெண் வேட்பாளர்கள் என சரிசம வாய்ப்பை கொடுத்தது.
வழக்கமாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் இந்த முறை மை சின்னத்தை ஒதுக்கியது. நாம் தமிழர் கட்சி போட்டியிடும் கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கிடைத்தது.
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காமல் போனதற்கு காரணம் கடந்த சட்ட சபை தேர்தலில் 6.58 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றதுதான். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு குறைந்தபட்சம் எட்டு சதவீதம் வாக்குகள் தேவைப்படும் நிலையில் அதற்கு குறைவான வாக்குகளை பெற்றதால் இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் பறிபோனது.
இருப்பினும் மைக் சின்னத்தில் போட்டி போட்டு தனது அங்கீகாரத்தை நிலைநாட்டியுள்ளது நாம் தமிழர் கட்சி.
நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் தோல்வியை தழுவி டெப்பாசிட்டையும் இழந்துள்ளது.
இருப்பினும் நாம் தமிழர் கட்சி வெற்றி பாதையை எட்டியதாகவே கூறப்படுகிறது.
கடந்த முறை 6. 58 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்ற நாம் தமிழர் கட்சி தற்போது 8.9% வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
மேலும் கன்னியாகுமரி, நாகை, ஈரோடு, திருச்சி, புதுவை, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட 7 இடங்களில் மூன்றாவது இடங்களை பிடித்து அதிமுகவை பின்தள்ளி உள்ளது.
12 தொகுதிகளில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளையும், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளையும், பத்து தொகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளது. சிவகங்கையில் அதிகபட்சமாக 1.63 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது.
10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில் நாம் தமிழர் கட்சி பாமகவை பின்னுக்கு தள்ளியுள்ளது.