நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து துவக்கம்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து துவக்கம்

பைல் படம் 

நாகையில் இருந்து இலங்கைக்கு நாளை முதல் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து சிவகங்கை என்ற பெயரில் கப்பல் இன்று வருகிறது. இதைத்தொடர்ந்து சோதனை ஓட்டம் நடக்கிறது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடு களுக்கு கப்பல் போக்குவ ரத்து இருந்தது. பல்வேறு காரணங்களால் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயங்கிய கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண் டும் நாகப்பட்டினம் துறை முகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு அக் டோபர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது.

இவ்வாறு தொடங்கிய செரியாபாணி என்ற பெயர் கொண்ட கப்பல் இயற்கை சீற்றத்தை காரணம் காட்டி 20ம் தேதி நிறுத்தப்பட்டது. .இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில்இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக் குவரத்து சேவை தொடங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஒன்றிய அரசு தமிழக அரசுடன் இணைந்து டெண்டர் விடப்பட்டது. இதனால் மீண்டும் கப்பல் போக்குவரத்து வரும் 13ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி நாகப்பட் டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கே சன் துறைக்கு சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் தயா ராகி நேற்று முன்தினம் (10ம் தேதி) மதியம் சென்னை துறைமுகம் வந்தது. அங் குள்ள கப்பல் போக்குவ ரத்து அலுவலகத்தில் பதிவு உள்ளிட்ட சில அரசு சார்ந்த பணிகள் நடைபெ றுகிறது.

இதனால் சென்னையில் இருந்து நேற்று (11ம் தேதி) மதியம் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர வேண்டிய சிவகங்கை கப்பல் இன்று (12ம் தேதி) மதியம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நாகப்பட்டினம் துறைமுகம் வந்தடைந்த கப்பல் விதிமுறைகளுக்கு உட்பட்டு சோதனை ஓட் டம் நடைபெறும். சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற பின்னர் நாகப்பட்டினம் துறைமு கத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை நாளை (13ம்தேதி) தொடங்க உள் ளது. நாகப்பட்டினம்துறை முகத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கப் பல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறை சென்ற டையும். அதே போல் இலங்கை யில் இருந்து 2 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடையும். பயண நேரத்திற்கு தாக 3 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் துறை முகத்திற்கு வரவேண்டும். அதாவது 8 மணிக்கு பய ணம் செய்வோர் காலை 5 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் வர வேண் டும். பரிசோதனைகள் அனைத்து முடிந்த பின் னர் பயணிகள் கப்பலில் ஏற்றப்படுவார்கள். நாகப் பட்டினம் துறைமுகத்தில் 4 கவுண்டர்கள் திறக்கப்பட் டுள்ளது. பயணம் செய்யும் பயணி ஒருவர் கையில் 5 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்ப டுகிறது .

இதை தவிர 60 கிலோ எடை கொண்ட பொருளை எடுத்து செல்லலாம். இந்த 60 கிலோ எடையை 20 கிலோ வீதம் 3 பண்டல்க ளாக பிரித்து எடுத்து வர வேண்டும். 150 இருக்கைகள் உள்ளது. இதில் 27 இருக் கைள் பிரிமியம் கிளாசிக் இருக்கை ஆகும். இதற்கு கட்டணம் அமெரிக்க நாட் டின் டாலர் 75 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி ஆகும். மீதமுள்ள 123 இருக்கைகள் கிளாசிக் இருக்கை ஆகும். இதற்கு கட்டணம் அமெ ரிக்க நாட்டின் டாலர் மதிப் பில் 50 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி ஆகும். இதை தவிர கப்பலில் குளிர்பானம், டீ, காபி, உணவு வகைகள் உள்ளது. இதற்கு தனியாக கட்டணம்தாக செலுத்த வேண்டும். கப்பலில் பயணம் செய்ய www.sailindsri.com என்ற இணைய தளம் முகவரி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்ய வேண் டும். அல்லது md@indsri. ferry.co.in முன்பதிவு செய்யலாம். டிராவல் ஏஜண்டுகள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து முன் அனுமதி பெற்று இணைத்து கொள்ள வேண்டும். சென்னையில் இருந்து யாழ்பாணம் செல்லும் விமான கட்டணம் ரூ.8 ஆயிரம் ஆகும். இதில் 15 கிலோ எடை கொண்ட பொருட்கள் மட்டுமே பயணிகள் எடுத்து செல்ல முடியும். ஆனால் கப்பலில் பயணம் செய்ய கட்டணம் ரூ.4 ஆயிரத்து 800 ஆகும். பயணிகள் 60 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல முடியும். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாஸ்போர்ட் அவசியம் வேண்டும். இந் திய நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு விசா தேவையில்லை. ஆனால் இடிஏ என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த விண் ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண் டியது இல்லை. கப்பலில் பயணம் செய்வோர் மது அருந்தவும், புகைபிடிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

Tags

Read MoreRead Less
Next Story