நாகூர் ஹனிபா நினைவு தினம் அனுசரிப்பு
மலர்களை தூவி மரியாதை
இறைவனிடம் கையேந்துங்கள்" என்ற காந்த குரலுக்கு சொந்தக்காரரான நாகூர் ஹனிபா நினைவு தினத்தையொட்டி நாகூர் தர்காவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் ஏராளமான திமுகவினர் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
நூற்றுக்கணக்கான இசைப்பாடல்களை இசுலாமிய பக்திப் பாடல்களாகவும், கட்சிப் பாடல்களாகவும் பாடிய நாகூர் ஹனிபாவின் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் புகழ்பெற்றதாகும். குறிப்பாக திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முதல்வருமான கலைஞருக்கு நெருக்கமானவருமான நாகூர் ஹனீபா உடல்நிலை சரியில்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு காலமானார். இந்த நிலையில் நாகூர் தர்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நாகூர் ஹனிபா நினைவிடத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மற்றும் ஏராளமான திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் இறுதி வரை முக்கிய பங்கு வகித்தார். "இசை முரசு" என்றும் கலைஞரால் அழைக்கப்பட்ட நாகூர்ஹனீபா தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story