கோட்டை மாரியம்மன் கோவிலில் நவசண்டி யாக பூஜை

கோட்டை மாரியம்மன் கோவிலில் நவசண்டி யாக பூஜை

கோட்டை மாரியம்மன் கோவிலில் நவசண்டி யாக பூஜையை முன்னிட்டு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கோட்டை மாரியம்மன் கோவிலில் நவசண்டி யாக பூஜையை முன்னிட்டு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததை தொடர்ந்து தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது.

ஊர் மக்களின் நலனுக்காகவும், நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த 6-ந் தேதி நவசண்டி யாகம் தொடங்கியது. நேற்று 3-வது நாளாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், மூல மந்திர ஹோமம், சப்தசதி பாரயண ஹோமம், 13 அத்தியாய ஹோமம், சுஹாசினி பூஜை, கன்னியா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

மேலும் நவசண்டி யாகம் நடைபெறும் நாட்களில் கோவிலில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. முதல்நாள் யாகமானது அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 48-வது நாள் மண்டல பூஜை நிறைவு நாளான வருகிற 14-ந் தேதி வரை இந்த சண்டி யாகம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் சிறப்பு பூஜையும், இரவு 8 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் தலைமையில் செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story