பைக் விபத்தில் கப்பல் படை அலுவலர் பலி

பைக் விபத்தில் கப்பல் படை அலுவலர் பலி

தூத்துக்குடியில் பைக் மீது தனியார் பணியாளர் வாகனம் மோதிய விபத்தில் கப்பல் படை அலுவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் பைக் மீது தனியார் பணியாளர் வாகனம் மோதிய விபத்தில் கப்பல் படை அலுவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கேரளம் மாநிலம் மலப்புரம் திருவாலியைச் சேர்ந்தவர் விஷ்ணு (31). தேசிய மாணவர் படையின் கப்பல் படை பிரிவு அலுவலர். இவர் தற்போது தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில், இவர் இன்று காலையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம். இவர் மில்லர்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றி வந்த பேருந்து இவர் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் (பொ) பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்து பஸ் டிரைவர் ஜேஜே நகர் 5வது தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் விஜயராஜ் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த விஷ்ணுவுக்கு இரண்டரை ஒரு குழந்தை உள்ளது. யோகா தினத்தில் என்சிசி அலுவலர் உயிரிழந்த சம்பவம் அலுவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story