ரயில்வே ஒன்றிய அமைச்சரை சந்தித்த நவாஸ்கனி எம்.பி

ரயில்வே ஒன்றிய அமைச்சரை சந்தித்த நவாஸ்கனி எம்.பி

ரயில்வே கோரிக்கைகளை முன் வைத்து ஒன்றிய ரயில்வே அமைச்சரை நவாஸ்கனி எம்.பி சந்திப்பு

ரயில்வே கோரிக்கைகளை முன் வைத்து ஒன்றிய ரயில்வே அமைச்சரை நவாஸ்கனி எம்.பி சந்திப்பு

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி எம்.பி சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ரயில்கள் நின்று செல்வது, அறந்தாங்கி பகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகள், விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி, இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் சூடையூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் கேம்ப் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்வது,காரைக்கால் முதல் தூத்துக்குடி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமான ரயில்வே திட்டத்தை மீண்டும் துவங்கி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது,

இராமேஸ்வரம் - சென்னை ரயில் பெட்டிகளை புதிய பெட்டிக்களாக மாற்றுவது, கொரானோ பொது முடக்கத்திற்க்கு முன்பு இயக்கப்பட்ட அனைத்து இரயில்களையும் மீண்டும் இயக்குவது, இராமேஸ்வரம் வரையிலான புதிய ரயில்களை இயக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.

Tags

Next Story