வந்தவாசி அருகே தண்ணீர் கூட அருந்தாமல் விரதமிருந்து உயிர்துறந்த முதியவர்

வந்தவாசி அருகே தண்ணீர் கூட அருந்தாமல் விரதமிருந்து உயிர்துறந்த முதியவர்

உயிரிழந்த முதியவர்


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் டி.செல்வகுமார் (வயது 67). இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சமண மதத்தைச் சேர்ந்த டி.செல்வகுமார் மோட்சம் அடைவதற்காக வந்தவாசியை அடுத்த பொன்னூர் மலை அருகில் உள்ள விசாகாச்சாரியார் தபோ நிலையத்தில் கடந்த 21-ந் தேதி சல்லேகனை விரதத்தை தொடங்கினார்.

மேலும் உணவு உண்ணாமல் தண்ணீர் கூட அருந்தாமல் தொடர்ந்து கடும் விரதமிருந்து வந்த அவர் நேற்று முக்தி அடைந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு தபோ நிலைய வளாகத்தில் சமண மத முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தி அவரது உடல் தேங்காய்கள் மூலம் எரியூட்டப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story