நீட்: தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு - தேசிய தேர்வு முகமை!

நீட்: தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு - தேசிய தேர்வு முகமை!

முதுநிலை நீட் தேர்வு

முதுநிலை நீட் தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அவை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே மாற்றி தேசிய தேர்வு முகமை ஒதுக்கீடு செய்துள்ளது .

திமுக எம்.பி. வில்சன், அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து தேர்வு மையங்களை மாற்றக் கோரி மனு அளித்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி மற்றும் அரியலூரைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு ஆந்திரா மாநிலம் கர்னூலில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்களுக்கு கரூர் மற்றும் திருச்சியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தேர்வு எழுத இருந்த பெண் மருத்துவர்கள் பலருக்கும் தமிழ்நாட்டிலேயே மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 31ஆக இருந்த தேர்வு மையங்கள் 17ஆக குறைக்கப்பட்டதே வெளி மாநிலங்களில் மையம் ஒதுக்க காரணம்.

தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிட்ட 4 மையங்களில் ஒன்றை ஒதுக்காமல் வேறு மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டது. மையங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என தேசிய தேர்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story