மருத்துவ இளநிலை படிப்புகளான நீட் தேர்வு முன்பதிவு தொடக்கம்

மருத்துவ இளநிலை படிப்புகளான நீட் தேர்வு முன்பதிவு தொடக்கம்

கோப்பு படம் 

மருத்துவ இளநிலை படிப்புகளான நீட் தேர்வு முன்பதிவு இன்று முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் மருத்துவ இளநிலை படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் ராணுவ நர்சிங் கல்லூரியில் சேர்வதற்கான நீட் தேர்வு முன்பதிவு தொடங்கியது. அதன்படி இன்று முதல் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், exams.nta.ac.in இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் மார்ச் 9ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற 'மே' மாதம் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 8525 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

Tags

Next Story