நெமிலியில் தாலுகா மருத்துவமனை: பா.ம.க. வேட்பாளர் பாலு வாக்குறுதி!

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு பிரச்சார மேற்கொண்டார்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வக்கீல் கே.பாலு ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மேற்கு ஒன்றியத்தில் உள்ள பொய்கைநல்லூர், பனப்பாக்கம் பேரூராட்சி, தென்மாம்பாக்கம், நெடும்புலி, துறையூர், உளியநல்லூர், கோடம்பாக்கம், மகேந்திரவாடி, வெளிதாங்கிபுரம், காட்டுப்பாக்கம், மேலேரி, அரசங்குப்பம், எலத்தூர், கீழ்களத்தூர், பெரப்பேரி, நெமிலி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில்,'நெமிலியில் தாலுகா மருத்துவமனை, தீயணைப்பு நிலையம் கொண்டுவரப்படும். சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். பல்வேறு பகுதி மக்களின் கோரிக்கையான சுடுகாடு சாலை வசதியை மேம்படுத்துவேன். மதுக்கடைகளை மூட அனைவரும் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்,' என்றார்.

Tags

Next Story