புதிய பச்சிளம் குழந்தை நிலைப்படுத்துதல் பிரிவு - அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வை

அடையாறு சமுதாய சுகாதார நிலையத்தில் புதிய பச்சிளம் குழந்தை நிலைப்படுத்துதல் பிரிவினை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தது பார்வையிட்டார்.
அடையாறு சமுதாய சுகாதார நிலையத்தில் புதிய பச்சிளம் குழந்தை நிலைப்படுத்துதல் பிரிவினை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தது பார்வையிட்டார். 2023-24ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில் உள்ள சமுதாய சுகாதார நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய பச்சிளம் குழந்தை நிலைப்படுத்துதல் பிரவினை (New Born Stabilization Unit) திறந்து வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தேசிய நலவாழ்வுக் குழுமத் திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) கோ. சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர் ஆர்.துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story