அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.50லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை

அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.50லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம்  கட்ட பூமி பூஜை

களரம்பட்டி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.50லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.

களரம்பட்டி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.50லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.

சேலம் களரம்பட்டி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென அந்த பகுதி மக்கள் மண்டல தலைவர் அசோகன், பகுதி செயலாளர் சரவணன் மற்றும் வார்டு செயலாளர் சீனிவாசன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனை ஏற்று சேலம் மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து பள்ளி புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. இதில் மேயர் ராமச்சந்திரன் பங்கேற்று பூமி பூஜைபோட்டு பணியை தொடங்கி வைத்தார். அப்போது கொணடலாம்பட்டி மண்டல தலைவர் அசோகன், பகுதி செயலாளர் சரவணன், நெசவாளர் அணி அமைப்பாளர் ஓ.டெக்ஸ் இளங்கோவன், வார்டு செயலாளர் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் சந்திரன், பம்பாய் முருகேசன் பகுதி துணைச் செயலாளர் ராஜசேகர், பள்ளி தலைமை ஆசிரியர் குறளமுது மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story