தமிழகத்தில் புதிய பேருந்துகள் - அமைச்சர் சிவசங்கர் அப்டேட் !

தமிழகத்தில் புதிய பேருந்துகள் - அமைச்சர் சிவசங்கர் அப்டேட் !

அமைச்சர் சிவசங்கர் 

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்பது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 21 புதிய பேருந்துகள் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதற்கட்டமாக சென்னையில் அடுத்தவாரம் முதல் தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் அடுத்த வாரம் அந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. அதற்குப் பிறகு கோவைக்கும் அந்த பேருந்துகள் வர உள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க தமிழக முதல்வர் நிதி ஒதுக்கி அவை பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.

மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகள் வாங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு, முதல் 100 பேருந்துகளுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு முதல் 100 பேருந்துகள் சென்னையிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும்.

மினி பேருந்துகள் குறித்த கருத்துக்களை அரசுக்கு தெரிவிப்பதற்கு காலம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 22ஆம் தேதி உள்துறை செயலாளர் தலைமையில் அது குறித்து கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது.'' எனத் தெரிவித்தார்;

Tags

Next Story