தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய ரயில் சேவை

தூத்துக்குடி மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வண்டி எண் 16766 இரவு 10.50 மணிக்கு தூத்துக்குடியில் கிளம்பி மதுரை வழியாக மறுநாள் காலை 6.18 மணிக்கு கோவை ரயில் நிலையம். காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16765 இரவு 8.00 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி இரவு 8.40 மணிக்கு கோவை ரயில் நிலையம். மறுநாள் காலை 4.20 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story