சேதமடைந்த குதிரை ஓடுதளம்
Race clup
சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. குறிப்பாக மலர் கண்காட்சி உட்பட பல்வேறு கண்காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை கவரும். மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு குதிரைப் பந்தயம் கடந்த ஒரு மாதமாக வார இறுதி நாட்களில் நடைபெற்று வருகிறது. இதில் டெர்பி உள்ளிட்ட குதிரை பந்தயங்கள் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டன. இந்த நிலையில் நீலகிரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் குதிரை பந்தயம் நடக்கும் மைதான ஓடுதளம் பெரும் சேதம் அடைந்து உள்ளது.
இதனால் குதிரை பந்தயம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மே - 18,19,25, மற்றும் 26 ஆகிய 4 நாட்கள் நடக்க இருந்த குதிரை பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உள்ளூர் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட பந்தயங்கள் ஜூன் - 1ம் தேதி நடைபெறும் என மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது அன்றைய தினம் வெலிங்டன் ராணுவ கோப்பை, நீலகிரி தங்ககோப்பை உள்ளிட்ட முக்கிய பந்தயங்களும் நடைபெறவுள்ளது.